வியாழன், 21 மே, 2020
வரலாற்றில் இன்று.... மே 21
வராலாற்றில் இன்று - (21.05.20)
உலக கலாச்சார பன்முகத் தன்மையின் முன்னேற்ற தினம்
👥 கலாச்சாரம் என்பது பழங்கால வரலாற்றையும், பழக்க வழக்கங்களையும் அறிந்து கொள்ள நமக்கு உதவுகிறது. ஒரு குழுவின், இனத்தின், நாட்டின் கலாச்சாரத்தை அறிந்துகொள்ள முடிகிறது.
👥 ஐ.நா.பொதுச்சபை 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அதன்மூலம் மே 21ஆம் தேதியை உலக கலாச்சார பன்முகத் தன்மையின் முன்னேற்ற தினமாக அறிவித்தது.
சர்வதேச எய்ட்ஸ் கேண்டில் லைட் நினைவு நாள்
⭐ சர்வதேச எய்ட்ஸ் கேண்டில் லைட் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் மே 21ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. சமூக விழிப்புணர்வு, சமூகத்தை அணி திரட்டல் போன்ற காரணங்களுக்காக 1983ஆம் ஆண்டுமுதல் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
⭐ உலகில் தற்போது மக்கள் எச்.ஐ.வி. பாதிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எச்.ஐ.வி. விழிப்புணர்வு பிரச்சாரம் உலகில் மிகப்பெரிய பிரச்சாரங்களில் ஒன்றாகும்.
மேரி அன்னிங்
🐲 புதைபடிம ஆராய்ச்சி என்ற புதிய அறிவியல் துறை உருவாக காரணமாக இருந்த தொல்பொருள் ஆய்வாளர் மேரி அன்னிங் 1799ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி இங்கிலாந்தின் டார்செட் நகரில் பிறந்தார்.
🐲 இவர் சிறுவயதிலிருந்தே புதைபடிமங்களான சிப்பி, சங்குகளை சேகரிக்க, தந்தையுடன் செல்வார். பண்டைய விலங்குகளின் எலும்புகள் உட்பட பல அரிய வகை தொல்படிமங்களை சேகரிப்பதில் மெல்ல மெல்ல மேரியும் திறமை பெற்றார்.
🐲 1823-ல் முதன்முதலாக ப்ளிசியோசரஸ் என்ற அரிய விலங்கின் முழு எலும்புக்கூட்டை கண்டறிந்தார். அதன் பிறகு டிராகன் எலும்பு, ஸ்கொலராஜா என்ற அரிய வகை மீனின் எலும்புக்கூட்டையும் கண்டுபிடித்தார்.
🐲 பழைய சரித்திரத்தை எதிர்வரும் சந்ததிகள் அறிந்துகொள்ள வழியமைத்துக் கொடுத்த சாதனை மங்கையான மேரி அன்னிங் 48-வது வயதில் (1847) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
👉 தீவிரவாத எதிர்ப்புத் தினம் :
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மறைந்த தினம் தீவிரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி கொலை செய்யப்பட்டதன் நினைவாக இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நாகரீக வாழ்க்கை முறைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற கோட்பாட்டில் உறுதியாக இருக்க இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
🌸 1904 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி பாரிசில் சர்வதேச கால்பந்தாட்ட கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
💥 இலண்டனில் உள்ள பிக் பென் மணிக்கூண்டு முதல் முறையாக 1859 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி இயக்கப்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
முக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....
தொடர்பு படிவம்
மீண்டும் வருகை தரும் வாசகர்களுக்கு Allnews.in மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறது! உங்களுக்கு தெரியுமா? - நீங்கள் செய்திகளை உங்கள் நண்பர் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்ப செய்தியைப் பகிர்க -வை பயன்படுத்தவும்.







0 comments:
கருத்துரையிடுக