மாற்றுத்திறனாளி ?
சில நேரங்களில்
நான் கூட செவிடனாகிறேன்!
உயிர்கொடுத்த உண்மைக்கடவுள்
என் தாயை கண்டுகொள்ளாத சிலநேரங்களில்
நான் கூட குருடனாகிறேன் !
சில நேரங்களில்
நான் கூட ஊமையாகிறேன் !
என்னால், வெற்றியாளனாய்
வீர நடை
போட முடியாததையெண்ணி,சிலநேரங்களில்
நான் கூட நொண்டியாகிறேன் !
புதுமைகள் படைத்தால், பூரிப்படைந்து பாராட்டும் நான், எனக்கு மிக நெருக்கமானவர்கள் சாதித்துவிட்டால்,
கை தட்டவும் முடியாமல்,
கை குலுக்கவும் மனமின்றி, வென்றவனைக் கூட குறைகூறிக் கொண்டிருக்கும்
சில நேரங்களில்
நான் கூட
கையிழந்த ஊனனாகிறேன் !
பாதை தடுமாறி,
சுய ஒழுக்கம் தடம்மாறி
ஆடி, ஆடி நடக்கும்
சில நேரங்களில்
நான் கூட
ஆட்டிசம் வந்தவனாகிறேன் !
ஊமை
எவ்வளவோ மேல்!
நொந்து போகாத செவிடர்
எவ்வளவோ மேல்!
எவ்வளவோ மேல்!
வாங்கும்/கொடுக்கும்
கைகளை விட, இரண்டு கைகளை இழந்தும் நம்பிக்கையிழக்கா
கை ஊனன் எவ்வளவோ மேல்!
ஏதோ ஒரு பொருள் விற்றுப் பிழைக்கும் சுய கௌரவமான, குருடன்
எவ்வளவோ மேல்!
சில
மேதாவிகளை விட, ஆட்டிசம் நோயுற்றவன் எவ்வளவோ மேல்!
பாசக்கார விழிப்புணர்வில்லா மனிதர்களை விட, எல்லா வலிகளையும், தாங்கிக்கொண்டு, சங்கடங்களை சமாளித்து,
எதிர்நீச்சல்
போட்டு வாழும் ஊனமுற்றவன் எவ்வளவோ மேல்!
ஊனம் கொண்ட நம்மை விட, மாற்றுத்திறனாளிகள் என்கிற
உலகை மாற்றும் திறனாளிகள் எவ்வளவோ மேல்!
நம் பொறுப்பு;
இருப்பது சிறப்பு!
கொஞ்ச நாட்களே
நம் வாழ்வின் இருப்பு !
இயலாதவர்களே உலகை மாற்றிய/மாற்றுகிற மாற்றுத்திறனாளிகள் !
கொஞ்சம் நீயும் சிந்திப்பாயா சினேகிதனே,
மாற்றுத் திறனாளி







0 comments:
கருத்துரையிடுக