புதன், 20 மே, 2020
வரலாற்றில் இன்று.... மே 20
உலக அளவியல் தினம்
👉 நாம் இவ்வுலகில் காணக்கூடிய மற்றும் பயன்படுத்தக்கூடிய அனைத்துமே நிறை, மீட்டர், அடி, கொள்ளளவு என்று சர்வதேச அளவியல் சார்ந்து உள்ளன. எனவே அளவியலின் முக்கியத்துவத்தினை உணர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 20ஆம் தேதி உலக அளவியல் (Metrology) தினம் கொண்டாடப்படுகிறது.
👉 முதன்முதலாக 1875ஆம் ஆண்டு 17 நாடுகள் ஒன்று சேர்ந்து உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஒரே அளவினை பயன்படுத்த சர்வதேச அளவியலை உருவாக்கினர்.
பாலு மகேந்திரா
🎞 இந்தியத் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா 1939ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் மகேந்திரா.
🎞 இவருடைய பட்டயப்படிப்பு திரைப்படத்தைக் கண்டு, செம்மீன் படப்புகழ் ராமு காரியத் அவரது நெல்லு படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். அதைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.
🎞 பிறகு 1977ஆம் ஆண்டு பாலு மகேந்திரா அவரது முதல் படமான கோகிலாவை கன்னட மொழியில் இயக்கினார்.
🎞 சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு என இம்மூன்று துறைகளிலும் விருதுபெற்ற ஒரே திரைப்பட நிபுணர் இவரே.
🎞 சமகாலத் தமிழ் வாழ்க்கையை சித்தரிக்கும் பல படைப்புகளை உருவாக்கிய இவர் தனது 74வது வயதில் (2014) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
👉 1845ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி அயோத்தி தாசர் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் பிறந்தார்.
👉 1957ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி இந்திய சுதந்திர போராட்ட வீரரும், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வரும்மான த.பிரகாசம் மறைந்தார்.
👉 1570ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி உலகின் முதலாவது நவீன நிலவரையை (atlas) ஆபிரகாம் ஓர்ட்டேலியஸ் வரைந்தார்.
👉 1998ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி புளூடூத் (Bluetooth) வெளியிடப்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
முக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....
தொடர்பு படிவம்
மீண்டும் வருகை தரும் வாசகர்களுக்கு Allnews.in மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறது! உங்களுக்கு தெரியுமா? - நீங்கள் செய்திகளை உங்கள் நண்பர் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்ப செய்தியைப் பகிர்க -வை பயன்படுத்தவும்.







0 comments:
கருத்துரையிடுக