சனி, 23 மே, 2020
வரலாற்றில் இன்று.... மே 23
உலக ஆமைகள் தினம்
🐢 உலக ஆமைகள் தினம் மே 23ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அரிய வகை விலங்கினங்களில் ஒன்றான ஆமைகள் உயிரிழப்பதைத் தடுக்கவும், அழிவிலிருந்து பாதுகாக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக ஆமைகள் தினம் 2000ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது.
சர்வதேச மகப்பேறு ஃபிஸ்துலா ஒழிப்பு தினம்
💉 வளரும் நாடுகளில் சுமார் 2 முதல் 3.5 மில்லியன் வரை பெண்கள் இந்நோயுடன் வாழ்கின்றனர். ஆண்டிற்கு ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் பேர் இந்நோயினால் பாதிப்படைகின்றனர்.
💉 ஆகவே, இதனை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என 2003ஆம் ஆண்டு பிரச்சார இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதனால் ஐ.நா.சபையும் மே 23ஆம் தேதியை மகப்பேறு ஃபிஸ்துலா ஒழிப்பு தினமாக அறிவித்தது.
கார்ல் லின்னேயஸ்
👉 நவீன வகைப்பாட்டியலின் தந்தை கார்ல் லின்னேயஸ் 1707ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி ஸ்வீடனின் ராஷல்ட் கிராமத்தில் பிறந்தார்.
👉 இவர் படிப்பை முடித்துவிட்டு ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார். அதன்பிறகு தாவரங்கள், பறவைகள் மட்டுமல்லாமல் புவியியல் குறித்தும் ஆராய்ந்து ஏராளமான குறிப்புகளை எழுதினார்.
👉 புதுவகை தாவரங்களைக் கண்டறிந்து ஃப்ளோரோ லேப்போனிகா என்ற நூலை எழுதினார். இவரது சிஸ்டம் ஆஃப் நேச்சர் நூல் 1735ஆம் ஆண்டு வெளிவந்து, தாவரவியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
👉 1753ஆம் ஆண்டு இயற்கை அறிவியல் களத்தில் மாஸ்டர் பீஸ் எனக் குறிப்பிடப்பட்ட பிளான்ட் ஸ்பீசிஸ் நூலில் அனைத்து தாவரங்களையும் வரிசைப்படுத்தி, வகைப்படுத்தி, அனைத்திற்கும் பொருத்தமாக பெயர் சூட்டினார்.
👉 தற்கால சூழலியலின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் கார்ல் லின்னேயஸ் 70வது வயதில் (1778) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
🎼 1981ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி மறைந்தார்.
🎬 1906ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி நவீன நாடக இலக்கியத்தின் தந்தை ஹென்ரிக் இப்சன் மறைந்தார்.
வெள்ளி, 22 மே, 2020
வரலாற்றில் இன்று... மே 22
உலக பல்லுயிர் பெருக்க தினம்
உலக பல்லுயிர் பெருக்க தினம் என்பது இயற்கைக்கும், மனித வாழ்விற்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. உலகில் ஒவ்வொரு உயிரினத்தையும் அழிவில் இருந்து காப்பாற்றுவதற்கான முயற்சியாக, இத்தினம் மே 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
மனிதர்களாகிய நாம் வாழ்வதற்கு இப்பூமியில் உரிமை உள்ளது போலவே மற்ற விலங்கினங்களும், தாவர இனங்களும் வாழ உரிமை உண்டு. பூமியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பது மனிதனின் கடமையாகும். உயிரினங்களைப் பாதுகாக்கும் ஒப்பந்தத்தில் 150 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
உலக கோத் தினம்
உலக கோத் தினம் என்பது பிரிட்டனில் 2009ஆம் ஆண்டு பிபிசி ரேடியோ 6 என்ற எண்ணில் உருவானது. கோத் பிஜேக்கன் மற்றும் மார்டின் ஒல்டு கோத் ஒரு நிகழ்ச்சியை இயக்கினார்கள்.
பின்பு, ஒவ்வொரு வருடமும் மே 22ஆம் தேதி இந்த நிகழ்வை நடத்த முடிவு செய்தனர். இசை, பேஷன் ஷோக்கள், கலை, கண்காட்சி என இந்நாளில் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
ராஜாராம் மோகன்ராய்
இந்தியாவில் சாதி, மத, சமூக சீர்திருத்தத்தை ஏற்படுத்திய இராஜாராம் மோகன் ராய் 1772ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி வங்காளத்தில் பிறந்தார்.
இவர் சமூக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக செயல்பட்டார். இதன்மூலம் அனைத்து மக்களும் சாதி, மத வித்தியாசமின்றி ஒன்றாக இணைந்து ஒரே இறைவனை வழிபட வழிவகுத்தார்.
இந்தியாவின் முதல் சமூக, மத சீர்திருத்த இயக்கமான பிரம்ம சமாஜத்தை நிறுவினார். குழந்தைத்திருமணம், சிசுக்கொலை, தீண்டாமை, பெண்களுக்கு முழு உரிமை என பல போராட்டங்களை நடத்தினார். சதி என்னும் உடன்கட்டை ஏறும் சமுதாயக் கொடுமையை ஒழிக்க இவர் பெரிதும் பாடுபட்டார்.
தற்போது உலகம் முழுவதும் வலியுறுத்தப்படும் பெண்ணுரிமைக்காக 200 ஆண்டுகளுக்கு முன்பே போராடிய இந்திய மறுமலர்ச்சியின் தந்தை இராஜாராம் மோகன் ராய் தனது 61வது வயதில் (1833) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1906ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்.
இன்று இலங்கை குடியரசு தினம் : பிரித்தானிய ஆட்சி முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, 1972ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி குடியரசு தினம் பிரகடனம் செய்யப்பட்டது.
வியாழன், 21 மே, 2020
வரலாற்றில் இன்று.... மே 21
வராலாற்றில் இன்று - (21.05.20)
உலக கலாச்சார பன்முகத் தன்மையின் முன்னேற்ற தினம்
👥 கலாச்சாரம் என்பது பழங்கால வரலாற்றையும், பழக்க வழக்கங்களையும் அறிந்து கொள்ள நமக்கு உதவுகிறது. ஒரு குழுவின், இனத்தின், நாட்டின் கலாச்சாரத்தை அறிந்துகொள்ள முடிகிறது.
👥 ஐ.நா.பொதுச்சபை 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அதன்மூலம் மே 21ஆம் தேதியை உலக கலாச்சார பன்முகத் தன்மையின் முன்னேற்ற தினமாக அறிவித்தது.
சர்வதேச எய்ட்ஸ் கேண்டில் லைட் நினைவு நாள்
⭐ சர்வதேச எய்ட்ஸ் கேண்டில் லைட் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் மே 21ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. சமூக விழிப்புணர்வு, சமூகத்தை அணி திரட்டல் போன்ற காரணங்களுக்காக 1983ஆம் ஆண்டுமுதல் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
⭐ உலகில் தற்போது மக்கள் எச்.ஐ.வி. பாதிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எச்.ஐ.வி. விழிப்புணர்வு பிரச்சாரம் உலகில் மிகப்பெரிய பிரச்சாரங்களில் ஒன்றாகும்.
மேரி அன்னிங்
🐲 புதைபடிம ஆராய்ச்சி என்ற புதிய அறிவியல் துறை உருவாக காரணமாக இருந்த தொல்பொருள் ஆய்வாளர் மேரி அன்னிங் 1799ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி இங்கிலாந்தின் டார்செட் நகரில் பிறந்தார்.
🐲 இவர் சிறுவயதிலிருந்தே புதைபடிமங்களான சிப்பி, சங்குகளை சேகரிக்க, தந்தையுடன் செல்வார். பண்டைய விலங்குகளின் எலும்புகள் உட்பட பல அரிய வகை தொல்படிமங்களை சேகரிப்பதில் மெல்ல மெல்ல மேரியும் திறமை பெற்றார்.
🐲 1823-ல் முதன்முதலாக ப்ளிசியோசரஸ் என்ற அரிய விலங்கின் முழு எலும்புக்கூட்டை கண்டறிந்தார். அதன் பிறகு டிராகன் எலும்பு, ஸ்கொலராஜா என்ற அரிய வகை மீனின் எலும்புக்கூட்டையும் கண்டுபிடித்தார்.
🐲 பழைய சரித்திரத்தை எதிர்வரும் சந்ததிகள் அறிந்துகொள்ள வழியமைத்துக் கொடுத்த சாதனை மங்கையான மேரி அன்னிங் 48-வது வயதில் (1847) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
👉 தீவிரவாத எதிர்ப்புத் தினம் :
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மறைந்த தினம் தீவிரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி கொலை செய்யப்பட்டதன் நினைவாக இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நாகரீக வாழ்க்கை முறைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற கோட்பாட்டில் உறுதியாக இருக்க இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
🌸 1904 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி பாரிசில் சர்வதேச கால்பந்தாட்ட கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
💥 இலண்டனில் உள்ள பிக் பென் மணிக்கூண்டு முதல் முறையாக 1859 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி இயக்கப்பட்டது.
புதன், 20 மே, 2020
வரலாற்றில் இன்று.... மே 20
உலக அளவியல் தினம்
👉 நாம் இவ்வுலகில் காணக்கூடிய மற்றும் பயன்படுத்தக்கூடிய அனைத்துமே நிறை, மீட்டர், அடி, கொள்ளளவு என்று சர்வதேச அளவியல் சார்ந்து உள்ளன. எனவே அளவியலின் முக்கியத்துவத்தினை உணர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 20ஆம் தேதி உலக அளவியல் (Metrology) தினம் கொண்டாடப்படுகிறது.
👉 முதன்முதலாக 1875ஆம் ஆண்டு 17 நாடுகள் ஒன்று சேர்ந்து உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஒரே அளவினை பயன்படுத்த சர்வதேச அளவியலை உருவாக்கினர்.
பாலு மகேந்திரா
🎞 இந்தியத் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா 1939ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் மகேந்திரா.
🎞 இவருடைய பட்டயப்படிப்பு திரைப்படத்தைக் கண்டு, செம்மீன் படப்புகழ் ராமு காரியத் அவரது நெல்லு படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். அதைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.
🎞 பிறகு 1977ஆம் ஆண்டு பாலு மகேந்திரா அவரது முதல் படமான கோகிலாவை கன்னட மொழியில் இயக்கினார்.
🎞 சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு என இம்மூன்று துறைகளிலும் விருதுபெற்ற ஒரே திரைப்பட நிபுணர் இவரே.
🎞 சமகாலத் தமிழ் வாழ்க்கையை சித்தரிக்கும் பல படைப்புகளை உருவாக்கிய இவர் தனது 74வது வயதில் (2014) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
👉 1845ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி அயோத்தி தாசர் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் பிறந்தார்.
👉 1957ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி இந்திய சுதந்திர போராட்ட வீரரும், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வரும்மான த.பிரகாசம் மறைந்தார்.
👉 1570ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி உலகின் முதலாவது நவீன நிலவரையை (atlas) ஆபிரகாம் ஓர்ட்டேலியஸ் வரைந்தார்.
👉 1998ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி புளூடூத் (Bluetooth) வெளியிடப்பட்டது.
செவ்வாய், 19 மே, 2020
வரலாற்றில் இன்று... மே 19
உலக குடும்ப மருத்துவர் தினம்
ஒவ்வொரு ஆண்டும் மே 19ஆம் தேதி உலக குடும்ப மருத்துவர் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளுக்கு குடும்ப மருத்துவர்கள் வழங்கி வரும் பங்கையும், சேவையையும் முதன்மைப்படுத்த தேசிய கல்லூரிகள் கழகங்களின் உலக அமைப்பு (உலகக் குடும்ப மருத்துவர் அமைப்பு - WONCA) 2010ஆம் ஆண்டு முதன் முதலாக இந்நாளை அறிவித்தது.
குடும்ப மருத்துவர், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுவான மருத்துவராக நீண்ட காலமாக இருப்பதால், அவர்கள் நோய்வாய்ப்படும் போதும் அவர்களால் முடியாத பட்சத்திலும் வீட்டிற்கே வந்து மருத்துவம் பார்ப்பார். எனவே குடும்ப மருத்துவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை பாராட்டும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
நீலம் சஞ்சீவ ரெட்டி
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரான நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள், 1913ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் அனந்தபூர் என்ற மாவட்டத்திலுள்ள இல்லூர் என்ற கிராமத்தில் பிறந்தார்.
1929ஆம் ஆண்டு அனந்தபூருக்கு மகாத்மா காந்தியின் வருகை இவருடைய வாழ்க்கையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு அவருடைய கொள்கைகள் மீது ஈடுபாடு கொண்டார்.
இவர் ஆந்திரப்பிரதேச மாகாண காங்கிரஸ் கமிட்டி செயலாளராக நியமிக்கப்பட்டு, பத்து ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார். சென்னை காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர், செயலாளர், இந்திய சட்டமன்ற உறுப்பினர் என பல பதவிகளை வகித்த இவர், 1951ஆம் ஆண்டு தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆந்திரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றியும் பெற்றார். பிறகு, ராஜ்ய சபா உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் முதல் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1956ஆம் ஆண்டு முதல் 1960ஆம் ஆண்டு வரை சிறப்பாக பணியாற்றினார். பிறகு 1962ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தன்னுடைய பணியை 1964ஆம் ஆண்டு வரை தொடர்ந்தார்.
இவர் திறமையாகவும், நேர்மையாகவும் பணி ஆற்றியதால் 1977ஆம் ஆண்டு நடந்த குடியரசு தேர்தலில் போட்டியின்றி ஒரு மனதாக இந்தியாவின் குடியரசு தலைவராக (1977-1982) தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னுடைய இளம் வயதிலேயே தீவிர சுதந்திரப் பற்றுக்கொண்ட இவர் தன்னுடைய 83வது வயதில் (1996) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1996ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி தமிழ்நாட்டின் முன்னாள் பெண் முதல்வரான ஜானகி இராமச்சந்திரன் மறைந்தார்.
1985ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி விடுதலைப் போராட்ட வீரரும், பி. எஸ். என்று மக்களால் அழைக்கப்பட்ட பி. சுந்தரய்யா மறைந்தார்.
1904ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி இந்தியத் தொழில்துறையின் தந்தை என்று அறியப்படும் ஜம்ஷெட்ஜி நுஸர்வான்ஜி டாடா மறைந்தார்.
1824ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி இந்திய சிப்பாய் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர்களில் முக்கியமானவரான நானா சாகிப் பிறந்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
முக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....
தொடர்பு படிவம்
மீண்டும் வருகை தரும் வாசகர்களுக்கு Allnews.in மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறது! உங்களுக்கு தெரியுமா? - நீங்கள் செய்திகளை உங்கள் நண்பர் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்ப செய்தியைப் பகிர்க -வை பயன்படுத்தவும்.






