ஞாயிறு, 17 மே, 2020
வரலாற்றில் இன்று.... மே 17
மே – 3 ஆவது ஞாயிறு
சர்வதேச எய்ட்ஸ் கேண்டில் லைட் நினைவு நாள்...
(International AIDS Candlelight Memorial Day)
உலகில் தற்போது 33 மில்லியன் மக்கள் எச்.ஐ.வி. பாதிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எச்.ஐ.வி. விழிப்புணர்வு பிரச்சாரம் உலகில் மிகப்பெரிய பிரச்சாரங்களில் ஒன்றாகும். சமூக விழிப்புணர்வு, சமூகத்தை அணி திரட்டல் போன்ற காரணங்களுக்காக 1983ஆம் ஆண்டுமுதல் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 115 நாடுகளில் 1200 சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து இதனைக் கடைப்பிடிக்கின்றனர்.
உலக தொலைத்தொடர்பு தினம்
(World Tele Communication Day)
உலக தந்தி சங்கம் 1865ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதுவே 1934ஆம் ஆண்டில் உலக தொலைத் தொடர்பு சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இச்சங்கம் துவக்கப்பட்டதன் நினைவாகத்தான் ஒவ்வொரு ஆண்டும் மே – 17 அன்று இத்தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் தொலைத்தொடர்பை ஏற்படுத்தி, உலக மக்களிடம் ஒரு பிணைப்பை உருவாக்கியுள்ளது.
உலக உயர் இரத்த அழுத்த தினம்...
(World Hypertension Day)
ஒரு சராசரி நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான இரத்த அழுத்தம். இதைவிட 140/90 அதற்கு மேல் தொடர்ந்து இருந்தால் அதை உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு என்கிறோம். இதனால் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படுகிறது. இது சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
எட்வர்ட் ஜென்னர்
பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்த எட்வர்ட் ஜென்னர் 1749ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி இங்கிலாந்தின் பெர்க்லே நகரில் பிறந்தார்.
1765ஆம் ஆண்டு ஜான் ஃபியூஸ்டர் என்ற மருத்துவர் கவ் பாக்ஸ் (Cow-pox) நோய் உள்ளவர்களுக்கு பெரியம்மை வராது என்ற கட்டுரை எழுதி லண்டன் மருத்துவக் கழகத்திற்கு அனுப்பினார்.
பிறகு இவர் பெரியம்மைக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தே தீர வேண்டும் என்ற உறுதியுடன் 20 ஆண்டுகாலம் ஆராய்ச்சி மேற்கொண்டார்.
பின்பு கவ் பாக்ஸ் கிருமிகளை மென்மைப்படுத்தி ஊசிமூலம் ஒருவரது உடலில் செலுத்தினால் அவரை பெரியம்மை தாக்காது என்பதை நிரூபித்தார். ஏழை, எளியவர்களுக்கு இலவசமாக அம்மை ஊசி போட்டார்.
இயற்கையையும், மனிதகுலத்தையும் அளவுகடந்து நேசித்த மற்றும் கோடிக்கணக்கான உயிர்களைக் காத்தவருமான ஜென்னர் 73வது வயதில் (1823) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1897ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி இந்தி இலக்கியத்திற்கு புதுவடிவம் கொடுத்த தீரேந்திர வர்மா உத்தரப்பிரதேசத்தின் பரேலியில் பிறந்தார்.
Labels:
today's history
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
முக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....
தொடர்பு படிவம்
மீண்டும் வருகை தரும் வாசகர்களுக்கு Allnews.in மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறது! உங்களுக்கு தெரியுமா? - நீங்கள் செய்திகளை உங்கள் நண்பர் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்ப செய்தியைப் பகிர்க -வை பயன்படுத்தவும்.







0 comments:
கருத்துரையிடுக